மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உறவுகள் இடையே ஏற்பட்ட விரிசல் விலகிச் செல்லும். கருத்துக்களை வெகுவிரைவாக பரிமாறிக் கொள்வீர்கள். வெகவேகமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். சிறு வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும் சூழல் உள்ளது. தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும்.

அளவான பண வரவு கண்டிப்பாக வந்து கொண்டிருக்கும். அடுத்தவர்களின் பார்வையில் அதிக பணத்தை செலவழிக்க வேண்டாம். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொள்ளுங்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் எதிர்பாராத சில திருப்பங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். பெண்கள் இன்று சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இன்று மகத்துவமான நாளாக இருக்கும்.

திருமண வரன்கள் அமையும். இன்று மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: ஒன்று ஐந்து மற்றும் ஏழு
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்