ரிஷபம் ராசி அன்பர்களே,

இந்த நாள் கருத்துக்களை பரிமாறும் போது பொறுமை வேண்டும். வேகம் வேண்டாம். சிலர் பேச்சு உங்களை சங்கடப்படுத்தும். கவனமாக இருங்கள். பொது இடத்தில் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் நடைமுறை சுமாராக இருக்கும். பணவரவு சராசரியான அளவில் இருக்கும். சக நண்பர்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். மேலதிகாரிகளின் கெடுபிடி சந்திக்க வேண்டியது இருக்கும்.

திறமையால் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல் திருப்திகரமாக இருக்கும். சாதகமான நல்ல பலன் ஏற்படும். செயல் திறன் அதிகரிக்கும். நண்பர்களிடம் கவனமாக பேசுங்கள். பெண்கள் இன்று ஓய்வாக காணப்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும்.

சுறுசுறுப்புடன் செயல்களில் ஈடுபடுவீர்கள். இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் முயன்றால் வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்