தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் ஒரு திரைப்படத்திற்காக தன்னுடைய உடலை வருத்தி உருமாறி நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான சேது, காசி, அன்னியன், தெய்வத்திருமகள், ஐ, கடாரம் கொண்டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இதனை விக்ரம் நிரூபித்துள்ளார். கடந்த வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து பிரமோஷன் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் 2 நட்சத்திரங்கள் சந்திப்பு பெங்களூரில் நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரம் தொகுப்பாளர் உடன் சேர்ந்து சூப்பராக பாட்டு பாடி அசத்தினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mokka Memes இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mokkamemes)