உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது.

இதனைத்தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம்  வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. முதல் உ பாகத்தின் வரவேற்பால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2ம் பாகத்தின் டிரைலர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்தவகையில், இன்று படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் 1 நிமிட வீடியோவை படக்குழு.