சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி லெஜன்ட். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்ற ஐந்து மொழிகளிலும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் லேஜெண்ட் சரவணன் இளமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் நடிகரும், தொழிலதிபருமான சரவணனின் புதிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.   திருமணம் ஒன்றில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தாடி, மீசையுடன் இருக்கும் இவரது போட்டோக்களுக்கு இணையவாசிகள் சுவாரஸ்ய கமெண்ட் செய்து வருகின்றனர்.