சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, டாக்ஸி ஓட்டுநருக்கும் பெண் பயணிக்கும் இடையே நடந்த மோதலைக் காட்டி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் பயணி காரின் இருக்கையிலேயே சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த ஓட்டுநர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது வாழ்வாதாரமான கார் பாழாகிவிட்டதே என்ற வேதனையில் ஓட்டுநர் அதைக் கேள்வி கேட்க, அதற்கு அந்தப் பெண் “மெதுவாகப் பேசுங்கள்” என்றும், “நானே அதைச் சுத்தம் செய்து தருகிறேன்” என்றும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இந்த முழுச் சம்பவத்தையும் ஓட்டுநர் தனது அலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஓட்டுநருக்கு நேர்ந்த இந்த அவமரியாதை மற்றும் இழப்பிற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒரு சிலர் அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்பு அல்லது அவசரச் சூழல் இருந்திருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
A taxi driver accused a female passenger of urinating in his car in a viral video, sparking outrage and debate over passenger behavior.#TaxiDriver #Urinating #FemalePassenger #ViralVideo #NewsX pic.twitter.com/kKmHO9AP6g
— NewsX World (@NewsX) April 21, 2026
“>
எது எப்படியோ, ஒரு டாக்ஸி பயணத்தில் எதிர்பாராத விதமாக நடந்த இந்த அநாகரீகச் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
