அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் நாளை இணைய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது திமுக அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து பேசியதாக வெளிவந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் காலக்கெடு விதித்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்களை நீக்கினார்.
அதன் பிறகு செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்திய பாமா மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருப்பதாகவும் இதற்காக அவர் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இன்று காலை அவர் தன்னுடைய வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட நிலையில் செய்தியாளர்கள் பின்தொடர்ந்ததை அறிந்து மீண்டும் வீட்டிற்க்கே திரும்பினார். இந்த நிலையில் தற்போது அவர் அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின் போது முத்துசாமி செங்கோட்டையனை திமுகவில் இணைத்ததாக கூறப்படுகிறது.
