ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, ஹோர்முஸ் ஜலசந்தி தற்போது வர்த்தக கப்பல்களின் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். லெபனானில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஒட்டி, சர்வதேச வர்த்தக நலன் கருதி இந்த முக்கிய கடல் வழிப்பாதை திறக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் சரக்கு போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை இந்த அறிவிப்புடன் சில கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்து சிவிலியன் மற்றும் வணிகக் கப்பல்களும் ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஈரானிய கடற்படையின் முறையான அனுமதி இன்றி எந்தவொரு கப்பலும் நுழையக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணுவக் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.