முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த முதல்நிலை காவலரான அப்துல் காதர் இப்ராஹிம் என்பவர் கடந்த 2018ம் ஆண்டு தாடி வைத்திருந்தார். இதனால் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாக வழக்கு காவல் சட்ட விதிகளில் இதற்கு அனுமதி இருப்பதாகக் கூறிய நீதிபதி விக்டோரியா கெளரி, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
