திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி. இந்த முரசொலி நாளேட்டின் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன். இவருடைய தந்தை தியாகராஜன் நேற்று உடல் நலக் குறைவினால் காலமானார்.
அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று அமைச்சர் வேலுவும் முதல்வருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் தியாகராஜன் மறைவுக்கு திமுக முக்கிய புள்ளிகள் பலரும் இரங்கல் தெரிவித்தும் வருகிறார்கள்.
