முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி உடல் நலக்குறைவால் சற்று முன் குஜராத்தில்
காலமானார். அவருக்கு வயது 88. 60, 70களில் துரானி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல்-ரவுண்டரான இவர் 1961-62ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தன்னுடைய துணிச்சலான ஆட்டத்தால் பிரபலமானார். துரானி மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.