திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை கணக்கிட்டு எவ்வளவு காணிக்கை கிடைத்தது என்பது குறித்து வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2022-23ம் நிதியாண்டில் உண்டியல் வருமானம் ரூ.1520.29 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த தேவஸ்தான அறிவிப்பில், ‘கடந்த ஆண்டு மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். 2022 இல் ஜனவரி – டிசம்பர் வரை 2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். 2021ல் 1.04 கோடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.’ என அறிவித்துள்ளது.