சென்னை அருகம்பாக்கத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அப்போது அதில் வந்த லிங்கை அவர் கிளிக் செய்து ஒவ்வொரு டாஸ்க்காக செய்து முடித்தார். இறுதியில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து ரூ.2.50 லட்சம் பணம் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் அருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் போது சரஸ்வதி (23), விஜய் (24), தேஜா (22) ஆகியோர் பண மோசடி செய்தது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்து 13 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கிப் புத்தகங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது இவர்கள் கமிஷனுக்காக போலியாக வங்கி கணக்கு தொடங்கி பண மோசடி செய்தது தெரிய வந்தது. இவர்கள் மோசடி செய்த பணத்தை வேறொரு கும்பலிடம் கொடுத்து கமிஷன் தொகை பெற்றுள்ளனர். இதில் வட மாநில கும்பல் ஒன்று மூளையாக செயல்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வட மாநில கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.