யூபிஐ வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என செய்தி பரவ தொடங்கியதை அடுத்து என்சிபிஐ இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை கொடுத்து உள்ளது. அந்த வகையில், என்பிசிஐ எந்தவொரு வாடிக்கையாளரும் யூபிஐ வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் செலுத்தவேண்டியதில்லை என தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த முன் மொழிவு பிபிஐ-க்கு மட்டுமே பொருந்தும். அதாவது, வங்கி கணக்குகளை இணைப்பதாகும். சுருக்கமாக கூறினால், வணிகர்கள் வாலட் நிறுவனத்துக்கு 1.1% கட்டணத்தை செலுத்தவேண்டும். ஏனென்றால் இது ப்ரீபெய்டு கருவி ஆகும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.