தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ப்ரோக்டர் (77) காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 226 ரன்கள் குவித்து 41 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.