காதல் மரணத்திற்குப் பின்னும் தொடரும் என்பார்கள், ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த கேசி என்ற பெண் தனது கணவர் மீதான காதலால் செய்த காரியம் அனைவரையும் உறைய வைத்துள்ளது. 2011-ல் தனது கணவர் ஷான் திடீர் ஆஸ்துமா அட்டாக்கால் உயிரிழந்ததை ஏற்கும் மனநிலையில் கேசி இல்லை. கணவரின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் கலசத்தை எப்போதும் தன்னுடன் சுமந்து திரிந்தவர், ஒருகட்டத்தில் அந்தச் சாம்பலைச் சாப்பிடவும் தொடங்கினார். ஒருமுறை கை விரலில் ஒட்டிய சாம்பலைத் துடைக்க மனமில்லாமல் சுவைத்தவர், பிறகு அதற்கு அடிமையாகி ஒரு நாளைக்கு 5 முறை வரை கணவரின் அஸ்தியைச் சாப்பிட ஆரம்பித்தார்.

​இதுவரை சுமார் ஒரு பவுண்டுக்கும் அதிகமான அஸ்தியை அவர் சாப்பிட்டுத் தீர்த்துள்ளார். “அழுகிய முட்டை மற்றும் மண்ணின் சுவை கொண்டிருந்தாலும், இதைச் சாப்பிடும்போது என் கணவர் என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு கிடைக்கிறது” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் இந்த விசித்திரப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு, தற்போது தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.