நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்போது மாமன்னன், சைரன், போலா சங்கர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். டைரக்டர் தேசிங்கு பெரியசாமி டைரக்டில் நடிகர் சிலம்பரசன் தன் 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்திற்காக தற்காப்பு கலைக்கான பயிற்சியில் சிம்பு ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ்வுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தையானது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் சிம்புவுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கக்கூடிய முதல் படம் இதுவாக தான் இருக்கும். கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகின்றனர்.