தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து நேற்று காலமானார். இவர் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார். அவரது உடல் கோபாலபுரம் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் பின்னர் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது சகோதரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அருகில் இருந்தனர். இது பற்றி சீமான் கூறும் போது நான் ஒருமுறை பசியால் மயக்கமடைந்து விட்டேன். அப்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்தவர் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கவே அங்கு நேரில் சென்றதாக அவர் கூறினார்.
