நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதாவது குறை அல்லது பிரச்சனை இருந்தால் அதைத் தன்னிடம் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று உருக்கமாகப் பேசினார்.

“உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியது அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே இந்த அரசின் முக்கிய நோக்கம் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“>

 

முதல்வரின் இந்தப் பேச்சு, மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.