தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. மேடையில் தலைவர் விஜய் தனது கட்சியின் அதிரடி வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தபோது, அரங்கமே தொண்டர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது.
அப்போது விஜய்க்குப் பின்னால் மேடையில் அமர்ந்திருந்த திருநங்கை அனுஸ்ரீ வேலன், விஜய்யின் பேச்சைக் கேட்டு ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். விளிம்புநிலை மக்களுக்கான உரிமைகள் மற்றும் திருநங்கைகளுக்கான சிறப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானபோது, அவர் தனது கையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட காட்சி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆர்ப்பரித்த தவெக தொண்டர்கள்.. விஜய் பின்னால் அமர்ந்து கொண்டு கண் கலங்கிய திருநங்கை!#Chennai #TVKvijay #TVK #Electionmanifesto #TNelection2026 #NewsTamil24x7 pic.twitter.com/yenVc484Dl
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) April 16, 2026
“>
ஒரு முன்னணி நடிகர் தனது அரசியல் பயணத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கண்டு அவர் நெகிழ்ந்துபோனதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் பின்னால் அமர்ந்து அந்தத் திருநங்கை அனுஸ்ரீ ஆனந்தக் கண்ணீர் வடித்த இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை நெகிழச் செய்துள்ளது.
