தவெக மீது குதிரைப்பேரப் புகார் கூறப்பட்டு வரும் நிலையில், அதற்குத் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இங்கே குதிரைப்பேரம் நடைபெறுகிறது என்று சொல்பவர்களுக்கு நானும், அன்புச் சகோதரர் விஜய் பாலாஜியும் இணைந்து மிகத் தெளிவாக ஒன்றைக் கூற விரும்புகிறோம்.

இங்கே உண்மையில் குதிரை பேரம் பேசியது யார்? முதன்முதலில் திமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஆகலாம் என்று சொன்னது யார்?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ​மேலும் பேசிய அவர், “அண்ணா திமுகவுக்கும் திமுகவுக்கும் ஏதாவது கூட்டணி இதுவரைக்கும் நடந்திருக்கிறதா? தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்றை இவர்கள் தற்பொழுது செய்யத் துணிந்திருக்கிறார்கள்!” என்று தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நெத்தியடியாகப் பேட்டி அளித்துள்ளார்.