ஈபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) மீதான குதிரைப்பேரப் புகார் குறித்துத் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பிப் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டின் வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா இருக்கும் வரை… அம்மாவின் மீது வழக்கு போட்டு, அம்மாவைக் கைது செய்து சிறையில் அடைத்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் (திமுக) தான்” என்று பழைய வரலாற்றுச் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அப்படிப்பட்டவர்களோடு இன்றைக்குத் கைகோர்த்து, ‘நான் இணைந்து முதலமைச்சர் ஆகிறேன்’ என்று சொன்னால், இவர் உண்மையான அண்ணா திமுகவா என்பதுதான் இன்றைக்கு என்னுடைய கேள்வி! குதிரை பேரம் யார் நடத்தினார்கள் என்பதுதான் இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று” என்று தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் ஈபிஎஸ்-க்கு எதிராகப் பகிரங்கமாகக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
