த.வெ.க. மாநில மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ள திமுக அமைப்பு செயலாளர் TKS இளங்கோவன், “திமுகவினரை திட்டினால்தான் முதல்வராக முடியும் என விஜய் நினைப்பது வெறும் கற்பனை.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலை அவருக்கு உள்ளது. ஒரு நடிகர் என்று பேசுகிறாரே தவிர, அரசியல் செயல்பாடு எதுவும் இல்லை. முதல்வராக ஆசைப்படுவது பரவாயில்லை, ஆனால் அதற்கான செயல்பாடும், அனுபவமும் இல்லாமல் வெறும் பேச்சால் மட்டும்தான் அரசியலில் வர முடியாது” என சுட்டிக்காட்டினார். விஜய் மீது இந்த பதிலடி அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
