தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் நடிகரும் tvk தலைவருமான விஜய், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து பாராட்டுக்களையும், அவரின் சிறப்பையும் நினைவுகூறியிருந்தார் . இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக முன்னணி தலைவர் ஜெயக்குமார் இன்று ஊடகவியலாளர்களிடம் பேசும் போது, “இது ஒரு தேர்தல் யுக்தி. வாக்குகளைத் தேட விஜய், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் புகழையும், படங்களையும் பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது” என விமர்சித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது, ஜெயலலிதா ஆக முடியாது. அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் பண்பாடுகளை போல் நடந்து காட்ட முடியுமா என்பது கேள்விக்குறி. எம்ஜிஆர் மீது நம்பிக்கையுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த மக்கள், எந்தக் காலத்திலும் அந்த நம்பிக்கையை துறக்கமாட்டார்கள். அவர்கள் மற்ற எந்தக் கட்சிக்குப் போவதற்கும் வாய்ப்பில்லை” என துல்லியமாக தெரிவித்தார்.
