அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். இது ஒன்றும் சாதாரண கட்சி கிடையாது, எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம். எங்களிடம் அந்த ‘வில்பவர்’ (Willpower) இன்னும் இருக்கிறது. மீண்டும் பலமாகத் திரும்புவோம், மக்களுக்குச் சேவை செய்வோம் என்பதில் எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது” என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
கட்சி பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுவதை முற்றிலுமாக மறுத்த அவர், எதையும் தான் விளையாட்டாகப் பேசவில்லை என்றும், அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும் எச்சரித்துள்ளார். அதிமுகவை யாராலும் சுருக்கி எடை போட முடியாது எனவும், விரைவில் கட்சியின் எழுச்சி இருக்கும் எனவும் அவர் கூறியுள்ள இந்த கருத்துக்கள், அதிமுக தொண்டர்களிடையே ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
