டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் மிக முக்கியமான சூப்பர்-8 கட்டத்தில், இன்று இரவு 7 மணிக்குச் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.

தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த தோல்விக்குப் பிறகு, அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்த வெற்றி இந்தியாவுக்கு மிகவும் அவசியமானது. இந்நிலையில், நேற்றைய தீவிரப் பயிற்சியின் போது பவுண்டரி எல்லைக்கு அருகே கேட்ச் பிடிக்க முயன்ற சிவம் துபேவின் விரலில் பந்து பலமாகத் தாக்கியது. வலியால் அவர் துடித்ததைக் கண்ட சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர்.

“>

இருப்பினும், அந்தப் பலத்த அடி பெரிய காயமாக மாறாததால், சிறிது நேரத்திலேயே அவர் பயிற்சியைத் தொடர்ந்தார். ஏற்கனவே திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் எனப் பல வீரர்கள் காயம் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் வேளையில், பார்மில் இருக்கும் துபேவுக்கு நேர்ந்த இந்த ‘க்ளோஸ் கால்’ இந்திய அணி நிர்வாகத்தைப் பதறவைத்துள்ளது.