குமரி விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணியோடு மேலும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முக்கிய பிரதிநிதிகள் பாஜகவில் இணைவார்கள் என கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சூசகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அண்ணாமலை தலைமையில் டெல்லியில் 14 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக சுமுகமாக காய் நகர்த்தி பல முக்கிய புள்ளிகளையும் தன்வசம் ஈர்த்து வருகிறது.