அயலான்  திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். இதுவரை அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது