முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் இரவில் தங்குவதற்கு இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தவறானது என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை  திட்டவட்டமாக அறிவித்தது.

பக்தர்களின் நலன் கருதி, கனமழை பெய்யும் காலங்களில் மட்டும் கடற்கரையில் தங்குவதற்கு சில தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், நிரந்தரத் தடை ஏதும் இல்லை என்றும் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பரவும் தவறான தகவல்களால் பக்தர்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும், கனமழையின்போது மட்டும் காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது