ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இருந்த தளங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தரப்பில் கூறப்படும் நிலையில், இந்த மோதல் காரணமாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
மறுபுறம், ஈரான் அதிபர் மசூத் பெசிஷ்கியன் வளைகுடா நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் மண்ணைப் பயன்படுத்தி அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானைத் தாக்க அனுமதித்தால், அந்த நாடுகளும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது வான்வழிப் படைகளைத் தயார் செய்து வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேலும் தீவிரமடைந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
