மீன ராசி அன்பர்களே,

இன்று தைரியமாக எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை வளம் பெற கடுமையாக உழைப்பீர்கள்.  ஆர்வமுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெற முடியும். இனிய பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்துவிடும். இன்று அதிகமாக  உழைக்க  கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்.

இன்று கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இந்த நாள் இனிய நாளாக இருக்கும். பெண்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு செயல்பட முடியும். சிந்தித்து எடுக்கும் முடிவுகளில் கண்டிப்பாக வெற்றி இருக்கும். இன்று மாணவர்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவீர்கள் .படித்து முன்னேற வேண்டும்   என்ற எண்ணம் மேலோங்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடக்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு மற்றும் ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்