மீனம் ராசி அன்பர்களே, 

இன்று தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சுய கௌரவத்தை பாதுகாப்பீர்கள். அனைவரிடமும் எதார்த்தமாக நடந்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். இலக்கு எளிமையாக நிறைவேறும். லட்சிய நோக்குடன் வாழ்க்கை அமையும். உபரி வருமானம் கிடைக்கும்.

விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதனால் நல்ல முடிவு எடுக்க முடியும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்க்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். முயற்சியால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இன்று பெண்களுக்கு தெளிவான சிந்தனை ஏற்படக்கூடும். காரியங்கள் கைகூடி விடும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

இன்று மாணவர்களுக்கு புத்தி கூர்மை வெளிப்படும். விளையாட்டு துறையிலும் சாதிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக அமையும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்