மேஷம் ராசி அன்பர்களே,

இன்று கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கண்டிப்பாக கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள் என்றே சொல்ல முடியும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மற்றவர்கள் மத்தியில் உயர்ந்து காணப்படுவீர்கள். நல்லது நடக்கவில்லையே என்று கவலை கொள்ள வேண்டாம். கண்டிப்பாக நல்லது நடக்கும். கொஞ்சம் தாமதமாகலாம் மனம் கலங்காதீர்கள். பெண்கள் சுயநலம் கருதாமல் உழைப்பீர்கள் மனமகிழ்ச்சி ஏற்படும். காரியங்களில் வெற்றி ஏற்படும்.

இன்று மாணவர்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவராக கல்வி மீது முழு அக்கறையுடன் செயல்பட முடியும். கண்டிப்பாக மாணவர்கள் வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்