ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று திடீர் திடீரென்று சோகமாக காணப்படுவீர்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள் என்றே சொல்ல முடியும். வேலை நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். வெளியூர் பயணங்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும்.

தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதார்த்தமாக அனைவரிடமும் நடந்து கொள்வீர்கள். சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள் சிந்தித்து எதிலும் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். முழு முயற்சியால் வெற்றி பெற முடியும். சிறந்த வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கண்டிப்பாக வெற்றி பெறும் சூழல் உள்ளது. கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்பை விரிவு படுத்திக் கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்