சென்ற 2005-ஆம் வருடத்தில் ஷங்கர் டைரக்டில் விக்ரம் நடித்து வெளியான படம் “அந்நியன்”. இதில் சதா, விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்போது மிகப் பெரிய பொருட்செலவில் உருவான இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் ரசிகர்களுக்காக டிஜிட்டலில் இப்படத்தை ரீ-மாஸ்டர் செய்து உள்ளனர். விரைவில் இப்படத்தை தமிழகமெங்கும் ரீ ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அண்மையில் ரஜினியின் பாபா, தனிக்காட்டு ராஜா, கமலின் வேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் மீண்டும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.