நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடைசியாக நடித்த பதான் படம் 1000 கோடி ரூபாய்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இப்போது The Archies எனும் படத்தின் வாயிலாக நடிகையாக களமிறங்கி உள்ளார். இந்நிலையில் 23 வயதாகும் சுஹானா கான் மகாராஷ்டிராவின் Alibaug தீவு டவுனில் 12.91 கோடி ரூபாய்கு விவசாய நிலம் வாங்கி இருக்கிறாராம்.

அந்த 1.5 ஏக்கர் நிலத்தில் 2218 சதுரடிக்கு வீடும் உள்ளதாம். அதனை வாங்குவதற்காக அவர் 77.46 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்தி இருக்கிறார். அதற்குரிய பத்திரத்தில் சுஹானா கான் தன்னை agriculturist என குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் அங்கே விவசாய தொழில் செய்ய போகிறாரா அவர் என கேலி செய்து வருகின்றனர்.