தளபதி விஜய் நடிப்பில் சென்ற மாதம் வெளியாகிய படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கி இருந்தார். இந்த படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு வசூலில் தெறிக்க விட்டது. வாரிசு திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் தான் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் வாயிலாக பிரபலமான சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. எனினும் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.