2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
“நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என கூறியுள்ள சசிகலா, வலிமையான, ஒருங்கிணைந்த அதிமுகதான் எதிர்காலத்திற்கு தேவையான தீர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளார். கடந்த அரசியல் பிரிவுகள், கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் தவிர்த்து , மக்களின் நலனுக்காக ஒருமித்த அணியாக செயல்பட அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், 2026 தேர்தலை “அசுர பலத்துடன் சந்திப்போம்” எனவும், அதன் மூலம் அதிமுக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம் என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர அரசியல் சூழல் ஏற்கனவே உருவாகி வருவதாகவும், தொண்டர்கள் அனைவரும் மக்களின் மனதை வெல்வதற்கான ஒருமித்த முயற்சியில் ஈடுபட வேண்டுமென சசிகலா உற்சாகமாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, அதிமுகவினுள் புதிய ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் சாத்தியத்தை பெரிதும் உருவாக்கியுள்ளது.
