தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான செய்திகள் கூட வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் கிருஷ்ணகிரியில் ஒரு 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் சேர்ந்து கர்ப்பமாக்கினர். இந்நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லிக்குப்பம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி குழந்தைகளுக்கான உதவி தொலைபேசி நம்பர் மூலம் ஒரு புகார் கொடுத்தார்.
அதாவது ஒரு ஆசிரியர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அந்த மாணவி புகார் கொடுத்த நிலையில் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் ஞான பழனி (56) என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த மாணவியிடம் பள்ளி ஆண்டு விழாவின் போது தவறான கண்ணோட்டத்தில் நடந்து கொண்டதோடு அந்த மாணவி டாக்டர் உடை அணிந்த போது வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து போட்டோ எடுக்க வற்புறுத்தியுள்ளார். மேலும் இதன் காரணமாக அந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாணவி புகார் கொடுத்த நிலையில் விசாரணையில் அவர் மீதான குற்றம் உண்மை என்று தெரிய வந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
