மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 போட்டியில் டெல்லியைச் சேர்ந்த போட்டியாளர் ஸ்மிதி சாப்ரா, ராணுவ அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மேடையில் நடனமாடினார்.

இந்திய ராணுவத்தில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையில் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரைப் போல நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் அதிகாரிகளின் சேவையை கௌரவிக்க வேண்டும் என்ற அவரது நோக்கம் இருந்த போதிலும், இந்த நிகழ்ச்சியை பலர் “ஆயுதப்படைகளுக்கு அவமரியாதை” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“>

 

சமூக ஊடகங்களில் வைரலான இந்த காட்சி குறித்து பலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். “சீருடைக்கு மிகப்பெரிய அவமதிப்பு”, “மிகை தேசியவாதம் சர்க்கஸாக மாறிவிட்டது”, “உண்மையான ராணுவ சேவையை மேடை வித்தையாக மாற்றுவது தவறு” என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், “அழகுப் போட்டியில் உண்மையான ராணுவ அதிகாரிகளைப் போல நடிப்பது ஆயுதப்படைகளின் கௌரவத்தைக் குறைக்கும் செயல்” என்றும் பலர் கூறியுள்ளனர்.

“>

 

அழகுப் போட்டி என்பது கலை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் மேடை மட்டுமே; ராணுவம் தொடர்பான நிகழ்ச்சிகளை அங்கு சேர்ப்பது தவறு எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “சீருடையில் அதிகாரிகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது பத்திரிகை கவர்களுக்காக அனுப்புவது இத்தகைய தவறான முன்னுதாரணங்களை உருவாக்குகிறது” என்று சமூக வலைதள பயனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.