புதுச்சேரி அரசு மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வீடுகளில் முன்னுரை யூனிட்டுக்கு மேல் வரை உபயோகிப்பவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக மின்கட்டணம் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 66 பைசாவும், 250 யூனிட்டுக்கு மேல் 77 பைசாவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 60 பைசாவும், உயர் அழுத்த வர்த்தக நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 62 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.