இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் முன்னரே வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் மட்டும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை சேர்த்து எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர்  மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

  • 2 அக்டோபர் – மகாத்மா காந்தி ஜெயந்தி
  • 12 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
  • 14 அக்டோபர் -இரண்டாவது சனிக்கிழமை
  • 15 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
  • 18 அக்டோபர் – கதி பிஹு காரணமாக அஸ்ஸாமில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • 19 அக்டோபர்- சம்வத்சரி திருவிழா காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • 21 அக்டோபர் – துர்கா பூஜை
  • 22 அக்டோபர் – ஞாயிறு விடுமுறை
  • 23 அக்டோபர் – மகா நவமி, ஆயுத பூஜை
  • 24 அக்டோபர் – தசரா, விஜயதசமி, துர்கா பூஜை
  • 25 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • 26 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • 27 அக்டோபர் – துர்கா பூஜை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • 28 அக்டோபர் – நான்காவது சனிக்கிழமை
  • 31 அக்டோபர் – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் காரணமாக குஜராத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை