பொதுவாகவே மின்மினி பூச்சிகள் வெயில் காலத்தில் பெரும்பாலும் வெளிப்புற இடங்களில் நிலா ஒளியில் ஒளிர்வதை பலரும் பார்த்திருப்போம். இந்த மின்மினி பூச்சிகள் ஏன் இப்படி ஒளிர்கிறது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கோடை காலத்தை மின்மினி பூச்சிகளை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம். இவற்றின் ஆயுட்காலம் 61 நாட்கள் அதாவது இரண்டு மாதங்கள் மட்டுமே. இவை பூச்சிகளாக மாறும் நிலையில் கோடை காலம் தொடங்கி விடும்.

இந்த பூச்சிகள் இனச்சேர்க்கைகாக இரவில் ஒளர்கின்றன. தனது துணையை ஈர்க்க அது தன்னை ஒளிர வைக்கின்றது. இரவு நேரத்தில் மற்ற உயிரினங்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் ஒளிர்வது இந்த பூச்சிக்கு உதவியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் தங்களின் இரைகளை ஈர்க்கவும் இவை ஒளிர்கின்றன. மின்மினி பூச்சியின் வயிற்றுப் பகுதியில் ஏற்படக்கூடிய ஒரு வித வேதியியல் மாற்றத்தால் இந்த வெளிச்சம் உண்டாகின்றது இந்த வேதியல் ஆக்சிஜன், கால்சியம் மற்றும் அயோடின் ஆகியவற்றுடன் புரோட்டின் லூசிபரின் சேர்ந்து ஏற்படுத்தும் வேதியல் ஆகும். அதனால்தான் வயிற்றுப் பகுதியில் ஒரு விதமான ஒலி ஏற்படுகிறது.