பொதுவாகவே நாம் அனைவரும் மின் வயர்களின் அருகே செல்ல பயப்படுவோம். ஆனால் மின் வயர்களில் ஏராளமான பறவைகள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமர்ந்திருப்பதை பார்த்திருப்போம். அந்தப் பறவைகளை ஏன் மின்சாரம் தாக்கவில்லை என கட்டாயம் சிந்தித்திருப்போம். அதே சமயம் வவ்வால்கள் மற்றும் அணில்கள் மின்சாரம் தாக்கி வீதிகளில் இறந்து கிடப்பதையும் பார்த்திருப்போம். அவற்றை ஏன் மின்சாரம் தாக்கியுள்ளது பறவைகளை ஏன் தாக்கவில்லை என்பது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மின்னியகம் என்பது ஏற்றம் பெற்ற எலக்ட்ரான்களின் இயக்கம்தான். எலக்ட்ரான்கள் கம்பி வழியாக நகர்ந்து மின்சாரம் வடிவில் மின்வாதனங்களை இயக்குகின்றது. மின்சாரம் 2 கொள்கையில் இரண்டு வயர்கள் இயங்கும். மின்சாரம் ஓபன் சர்க்யூட் மற்றும் க்ளோஸ் சர்க்யூட் என்று செயல்படும். அதாவது நேர் ஏற்றம் மற்றும் மறை ஏற்றம் என ஒரே நேரத்தில் தொடர்பு படும் பட்சத்தில் மட்டுமே மின்சாரம் உருவாகும். ஒரு பறவை மின்சார கம்பியின் ஒரு கம்பியை மட்டும் தொட்டால் அது ஓபன் சர்கியூட் ஆகத்தான் இருக்கும். அதனால் எலக்ட்ரான்களின் இயக்கம் இடம்பெறாது.

ஆனால் இரண்டு கம்பிகளை ஒரே நேரத்தில் தொடும்போது குளோஸ் சர்க்யூட்டாக மாறும்போது எலக்ட்ரான்களின் இயக்கம் இடம்பெற ஆரம்பிக்கும். இதனால்தான் மின்சாரம் தாக்குகின்றது. பொதுவாகவே பறவைகள் அளவில் சிறியதாக இருப்பதால் ஒரே ஒரு கம்பியில் தான் அமர்ந்து பறக்கும். அதனால் தான் பறவைகளை மின்சாரம் தாக்குவதில்லை. ஆனால் வவ்வால்கள் அளவில் பெரியதாக இருக்கும், அணிலின் வாலும் நீண்டதாக இருக்கும். இதனால் மின் கம்பியில் அவை அமர்ந்தால் இரண்டு கம்பிகளை ஒரு சேர தொட்டுவிடும். இதனால்தான் மின்சாரம் தாக்கி உயிர் இழக்கிறது. இந்த விஷயம் மனிதர்களுக்கும் பொருந்தும். எனவே மின் வயர்களின் அருகே எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.