இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி விட்டனர். இன்னும் சொல்லப்போனால் சாப்பாடு ஊட்டுவதற்கு கூட குழந்தைகளுக்கு போன் தான் தேவைப்படுகிறது. எனவே நம்முடைய குழந்தைகளிடம் ஸ்மார்ட் ஃபோன்களை கொடுக்கும்போது போனில் இந்த ஐந்து செட்டிங்ஸை நீங்கள் மாற்ற வேண்டும். அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

போனில் பேரண்டல் கண்ட்ரோல் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை நீங்கள் Enabled செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களுடைய குழந்தைகள் போனில் தேவையில்லாத வெப்சைட்டுக்கு சென்றால் அப்ளிகேஷன்கள் மற்றும் பைல்களை அனுப்புவதற்கான அனுமதி கேட்கும். அதனால் குழந்தைகள் அதை அணுக மாட்டார்கள்.

அடுத்ததாக ஆப்ஷன் கன்டென்ட் ஃபில்டர்ஸ் . இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் பெரியவர்களுக்கான வெப்சைடுகள் மற்றும் குழந்தைகளுக்கான தேவையில்லாத வெப்சைடுகளை பிளாக் செய்ய முடியும்.

சேவ் சர்ச் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷன் மூலம் நீங்கள் ஆபாசம் கலந்த தேடல் முடிவுகளை ஃபில்டர் செய்யலாம். இதனால் நம்முடைய குழந்தை வெப்சைடுகளில் ஏதாவது ஒரு விஷயத்தை தேடும்போது அவர்களுக்கு அவர்கள் தேடும் விஷயம் மட்டுமே கிடைக்கும்.

ஆப் பெர்மிஷன்கள் என்ற ஆப்ஷன் மூலம் போன் தொடர்புகள் மற்றும் லொகேஷன் போன்ற விஷயங்கள் முக்கிய தகவல்களை அனுப்புவதற்கான அனுமதியை இதை வைத்து அப்படியே மாற்றிக் கொள்ளலாம்.

ஸ்கிரீன் டைம் லிமிட் என்ற ஆப்ஷன் மூலம் உங்கள் குழந்தை எவ்வளவு நேரத்திற்கு போனை பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும். இதன் மூலமாக ஸ்கிரீன் டைம் லிமிட் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் உங்களுடைய குழந்தை அதிக நேரத்திற்கு போனை பயன்படுத்தாது.