சிறுவயதிலிருந்தே நாம் அனைவரும் பென்சில் பயன்படுத்து இருப்போம்.. பென்சில் பயன்படுத்துவதற்கான காரணம் எழுத்துக்களை எழுதும் போது தவறாகி விட்டால் அதனை மீண்டும் அழித்துவிட்டு திரும்பவும் எழுதலாம். இதனால் பாடங்களை கற்றுக் கொள்வது மிகவும் எளிதாக இருந்தது. இந்த பென்சிலுக்கு பின்னால் ஏன் இந்த கருப்பு நிறம் இருக்கிறது என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே பென்சில் அனைத்திற்கும் பின்பு கருப்பு நிறத்தில் இருப்பதை பார்த்திருப்போம். நிறுவனம் ஏதாவது ஒரு விஷயத்தை செய்கிறது என்றால் அதில் பல பிசினஸ் யுக்தி இருக்கும். அப்படியான ஒரு யுக்தி தான் இந்த பென்சில் மூலமும் காட்டப்பட்டுள்ளது. இந்த கருப்பு நிறம் போடப்பட்டதற்கான காரணம் குழந்தைகள் பென்சிலை பயன்படுத்தும் போது அந்த கருப்பு நிறத்தை அடையும் முன்பு புதிய பென்சிலை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால்தான் பென்சில்களின் பின்பகுதியில் கருப்பு நிறம் உள்ளது. இந்த யுக்தியை பயன்படுத்தி குறித்த பென்சில் நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. இது உண்மையில் ஒரு வணிக உத்தி. இதன் மூலம், அவர்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்து, அவர்களின் யோசனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.