உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் 45 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அது குறித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை மாலை அயோத்தி லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. அந்த வீடியோவின்படி இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலையின் தடுப்பு சுவர் அருகே சாலையை கடப்பதற்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று பைக்கின் மீது மோதியது.

இதில் பைக் ஓட்டுநர் மேலே தூக்கி வீசப்பட்டு காரின் பானட்டில் விழுந்து பின்னர் வாகனத்தின் அடியில் சிக்கி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். அவர் காருக்கு அடியில் சிக்கிய பிறகு பல கிலோமீட்டர் தூரம் வரை அப்படியே இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக வாகன ஓட்டிகள் அந்த காரை நிறுத்தி காரை கவிழ்த்து அவரை மீட்ட நிலையில் அவர் இறந்துவிட்டார்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்துள்ளதோடு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

बाराबंकी में लखनऊ-अयोध्या हाईवे पर दिल दहला देने वाला हादसा!- CCTV में कैद हुई पूरी घटना

सफेदाबाद, कोतवाली नगर क्षेत्र में डिवाइडर के पास खड़े बाइक सवारों को तेज रफ्तार कार ने रौंदा
करीब 200 मीटर तक घसीटती गई कार
एक युवक की मौके पर मौत, दूसरा गंभीर घायल
गुस्साए ग्रामीणों ने कार… pic.twitter.com/2OyPXTjAkl

— आदित्य तिवारी / Aditya Tiwari (@aditytiwarilive) July 22, 2025