குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் பிரபல விடுதியில் மது விருந்து நடைபெற்றதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி ஆமதாபாத்தில் உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரபலமான ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது போதை விருந்து வழங்கப்பட்டது.
அந்த விருந்தில் வெளிநாட்டு மதுபானங்கள் பரிமாறப்பட்டது தெரியவந்தது. மேலும் மது போதையில் இளம் பெண்கள் நடனமாடி கொண்டாடியது தெரியவந்தது.
இதனை அடுத்து 26 இளம் பெண்கள் உட்பட 39 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விருந்து கொண்டாட்டத்தில் பரிமாறப்பட்ட விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், கஞ்சா உபகரணங்கள் உட்பட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
