மிதுன ராசி அன்பர்களே,

இன்று பாராட்டும் புகழும் கண்டிப்பாக வரக்கூடும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிரமங்கள் விலகிச் செல்லும். பக்குவமாக பேசி காரியங்களை சாதிக்க முடியும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் மேற்கொள்வீர்கள். இன்று உறவினர்களால் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி வரும். வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா என்ற எண்ணம் மேலோங்கும் .மனம் தளராமல் இருப்பது நல்லது.

இன்று எந்த செயலிலும் யோசித்து முடிவு எடுப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். இன்று குடும்பத்தாரிடம் கருத்துக்களை பரிமாறும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் நட்பு பாராட்ட கூடும்.

இன்று மனதில் புதிய தெம்பும்  உற்சாகம்  ஏற்படும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பெண்கள் இந்த நாளை மிகவும் அற்புதமாக கொண்டாடுவீர்கள். இன்று மாணவர்கள் கல்விக்கான ஆரம்பத்தை வித்திட வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் .கல்வியில் முழு முயற்சியினால் முன்னேற்றம் இருக்கும் .  இன்று சித்தர்கள் வழிபாட்டையும்  சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் .வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்