ரிஷப  ராசி அன்பர்களே,

இந்த நாள் தன வரவு தாராளமாக இருக்கக்கூடும். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கக்கூடும் .தடைகள் ஓரளவு விலகி செல்லக்கூடும் .கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விட முடியும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவார்கள்.

இன்று விவாக பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும் .காரிய வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அனுகூலமான நல்ல பலன் ஏற்படும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில்  ஈடுபடுவீர்கள். வாகனங்கள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும்.

இன்று பயணங்களால்  ஆதாயம் உண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. அதேபோன்று வாகனங்களில் பயணிக்கும் போது கவனமாக இருங்கள். பெண்களுக்கு இன்று கனவுகள் ஆசைகள் நிறைவேறும். இன்று நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எந்த பிரச்சினைகளுக்கும் உங்களுக்கு தீர்வு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

இன்று மாணவர்கள் கண்டிப்பாக பொறுப்பாக இருங்கள். கல்வி கண்டிப்பாக உங்களுக்கு சிறப்பாக அமையும். இன்றைய தினம் சித்தர்களின் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்